Wednesday, July 22, 2009
படித்தது : அரசியல் avalankal
மு. க. அழகிரி வாக்களிக்க வந்தபோது பணியில் இருந்த அரசு அலுவலர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றதுடன் அவர் செல்லும்வரை நின்று கொண்டிருந்தார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை தந்தது. அரசு அலுவலர்களின் இச்செயல் அருவருக்க தக்க கண்டனத்திற்கு உரியது. எதிர்காலத்தில் தவறான் வழிகாட்டுதலுக்கு வழி வகுத்து விட்டது. செய்தி:தினமணி. தேதி :22 மே. பக்கம்: 6
மனித வாழ்வு
சொர்கமோ நரகமோ நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டிய இடங்கள் அல்ல. நாமே உருவாக்கி கொள்கிற இடங்கள். மனிதன் ஒருவன் தான் சிரிக்க கூடிய தகுதி பெற்றவன். சிரிப்புக்கு இடமாகும் நிலையில் உள்ளவனும் அவனேதான். இறுகிய மனம் மூடிய புத்தகத்திற்கு சமம். அதாவது வெறும் காகித குப்பை. ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அந்த இடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில் இருந்து சறுக்கி விழுந்து விட்டால் காரணத்தை கண்டுபிடி. அதை விட்டு விட்டு நண்பனையோ ஒற்றர் உறவினரையோ குறை கூறாதே. தன் தோல்வியை எவன் ஒத்து கொள்கிறானோ அன்றே அவன் சமுதாயத்தில் பெரிய மனிதன் ஆகி விடுகிறான். பல தோல்விகளுக்கு பிறகு தற்செயலாக நிகழ்வது தான் பெரிய வெற்றி. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை அக்கறையுடன் விசாரித்து கனிவுடன் பேசினால் அடுத்த தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உண்மை, மற்றும் உழைப்பு.
Saturday, May 2, 2009
போராட்டமும் வாழ்வும்
அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்க முடியாது. பல இன்னல்களை தாண்டினால் மட்டுமே தனி ஒரு மனிதனால் முன்னேற முடியும். பள்ளி படிப்பு அறிவாளியை உண்டாக்கலாம். ஆனால் அனுபவம் தான் திறமைசாலியை உருவாக்கும். இப்பொழுது இருக்கும் பேர் சொல்லும் தலைவர்கள், விஞ்ஞாநிகள் போன்றோர் இம்மாதிரியான போராட்டங்களை கடந்தவர்கள் என்பது நாம் யாவரும் அறிந்ததே. சாதனை வாழ்க்கை நமக்கு சொந்தமாக வேண்டுமென்றால் போராட்டம், பிரச்சனை போன்றவற்றால் சூழ்ந்திருக்கும் பொது சோர்ந்து விடாமல் அமைதி காத்தல் உலகமும் உன்கையில்.
Thursday, April 30, 2009
பகுத்தறிவு
என்னை பொறுத்தவரை பகுத்தறிவு மட்டுமே ஒருவனை சிந்திக்க வைக்கும். பகுத்தறிவு என்பது எந்த ஒரு செயலையும், கருத்துகளையும் ஏற்கனவே அதற்கு இருக்கும் பொருள் அன்றி புதிதான கோணத்தில் பகுத்து பார்ப்பது. ஓவ்வரு மனிதருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அவர்கள் பார்வையில் பொருள் மாறுபடும். பகுத்தறிவு சுய சிந்தனையை அதிகரிக்கும். பகுத்தறிவை பற்றி முதலில் நமக்கு அறிமுக படுத்தியவர் பெரியார் ஆவார். சுய மரியாதை கோட்பாட்டையும் வலியுறித்தி உள்ளார். என்னை பொறுத்தவரை உண்மையான கல்வியினால் மட்டும் தான் பகுத்தறிவை வளர்க்க முடியும். கருத்துகளையும், கோட்பாடுகளையும் முழுமையாக புரிந்து கொண்டவர்களால் மட்டும் தான் பகுத்தறிவை பற்றி பேச முடியும். குழந்தையாக இருக்கும் போதே சுய சிந்தனையின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் கற்று கொடுக்க வேண்டும். சுய சிந்தனையானது சுய மரியாதையையும் தன்னம்பிக்கையும் அதிகப்படுத்தும் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பகுத்தறிவு சிந்தனையை ookapaduthuvom. வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம்.
Subscribe to:
Posts (Atom)