Thursday, April 30, 2009
பகுத்தறிவு
என்னை பொறுத்தவரை பகுத்தறிவு மட்டுமே ஒருவனை சிந்திக்க வைக்கும். பகுத்தறிவு என்பது எந்த ஒரு செயலையும், கருத்துகளையும் ஏற்கனவே அதற்கு இருக்கும் பொருள் அன்றி புதிதான கோணத்தில் பகுத்து பார்ப்பது. ஓவ்வரு மனிதருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அவர்கள் பார்வையில் பொருள் மாறுபடும். பகுத்தறிவு சுய சிந்தனையை அதிகரிக்கும். பகுத்தறிவை பற்றி முதலில் நமக்கு அறிமுக படுத்தியவர் பெரியார் ஆவார். சுய மரியாதை கோட்பாட்டையும் வலியுறித்தி உள்ளார். என்னை பொறுத்தவரை உண்மையான கல்வியினால் மட்டும் தான் பகுத்தறிவை வளர்க்க முடியும். கருத்துகளையும், கோட்பாடுகளையும் முழுமையாக புரிந்து கொண்டவர்களால் மட்டும் தான் பகுத்தறிவை பற்றி பேச முடியும். குழந்தையாக இருக்கும் போதே சுய சிந்தனையின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் கற்று கொடுக்க வேண்டும். சுய சிந்தனையானது சுய மரியாதையையும் தன்னம்பிக்கையும் அதிகப்படுத்தும் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பகுத்தறிவு சிந்தனையை ookapaduthuvom. வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment