Wednesday, July 22, 2009

மனித வாழ்வு

சொர்கமோ நரகமோ நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டிய இடங்கள் அல்ல. நாமே உருவாக்கி கொள்கிற இடங்கள். மனிதன் ஒருவன் தான் சிரிக்க கூடிய தகுதி பெற்றவன். சிரிப்புக்கு இடமாகும் நிலையில் உள்ளவனும் அவனேதான். இறுகிய மனம் மூடிய புத்தகத்திற்கு சமம். அதாவது வெறும் காகித குப்பை. ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அந்த இடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில் இருந்து சறுக்கி விழுந்து விட்டால் காரணத்தை கண்டுபிடி. அதை விட்டு விட்டு நண்பனையோ ஒற்றர் உறவினரையோ குறை கூறாதே. தன் தோல்வியை எவன் ஒத்து கொள்கிறானோ அன்றே அவன் சமுதாயத்தில் பெரிய மனிதன் ஆகி விடுகிறான். பல தோல்விகளுக்கு பிறகு தற்செயலாக நிகழ்வது தான் பெரிய வெற்றி. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை அக்கறையுடன் விசாரித்து கனிவுடன் பேசினால் அடுத்த தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உண்மை, மற்றும் உழைப்பு.

No comments:

Post a Comment